Accu weather

Saturday, November 7, 2009

பேசுங்க பேசுங்க



புதுசு புதுசா புதுப் புது வழிகளை கண்டுபிடித்து நம்மாட்கள் VOIP செய்வதும் அதை எப்படியாவது blog அல்லது forum-களை நோண்டி கண்டுபிடித்து அந்த VOIP இணையதளங்களையும் போர்ட்களையும் தடைசெய்வதும் வளைகுடாநாடுகளில் ISP அட்மின்களுக்கும் எக்ஸ்பேட்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மவுனப் போராட்டம். அள்ளிக்கொண்டு வரும் வெள்ளத்தை பிஞ்சு கைகள் கொண்டு தடை செய்ய முயல்வது போல பெருக்கெடுத்து வரும் தொழில்நுட்ப நன்மைகளை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். கடலிலிருக்கும் உப்பையெல்லாம் எடுத்து தரையில் கொட்டினால் உலகம் முழுக்க 500 அடி உயரம் வரைக்கும் அது நிரம்பி கிடக்குமாம். அதற்காக இலவசமாக உப்பைக் கொடுக்கச் சொல்லவில்லை. உப்பைபோல விலை குறைத்துக் கொடுக்கலாமே.

http://betacalls.com என ஒரு தளத்தை நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்தியிருந்தார். 10 டாலருக்கு 333 நிமிடம் வரைக்கும் பேசலாமாம். Hotspot போன்ற VPN மென்பொருள்கள் எதுவும் தேவையில்லை. முயன்றுபார்த்து சொல்லுங்கள்.

அதுபோல http://www.nettelsip.com (NetTelePhone) என ஒரு தளம் UAE-யிலிருந்து இந்தியாவிற்கு பேச நிமிடத்திற்கு 0.069 அமெரிக்க டாலர் வாங்குகிறார்களாம். அவர்கள் தளத்திலேயே UAE-யின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை இத்தளம் சட்டப்படி அனுமதிபெற்றே நடத்தப்படுகின்றதோ என்னமோ? குறைந்த விலையிலேயே நிறையப் பேசலாம்.

“உலகில் முதல் பேசும் கருவியை கண்டுபிடித்தவன் நானல்ல. அது கடவுள்தான். நான் கண்டு பிடித்த கருவியை இடையிலேயே நிறுத்தி பேசவிடாமல் செய்ய முடியும். ஆனால் இறைவன் கண்டு பிடித்த கருவியோ பேச ஆரம்பித்தால் அப்புறம் அதை நிறுத்தவே முடியாது. அந்த கருவிதான் பெண்கள்” என வேடிக்கையாக ஒருமுறை பிரபல விஞ்ஞானி எடிசன் அவர்கள் பேசியதாக சொல்வார்கள். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க.

Torrent ஐப் போலவே ஒரே Click ல் ஆங்கிலப் படங்களை download செய்வதற்கு மிகச் சிறந்த வலை தளம் என கீழ்கண்ட தளமொன்றை அறிமுகப் படுத்தியிருந்தார் இன்னொரு நண்பர்.
http://oneclickmoviez.com

தொடர்ந்து இதுபோன்ற பல பயனுள்ள நல்லத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

பெருவாரியான பின்னூட்டங்கள் வழியும் மின்னஞ்சல்கள் வழியும் மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துதல்கள் கூறி உற்சாகமூட்டிய அனைத்து இனிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சில சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும் இத்தனை நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வருகின்றார்கள் என்று.
இன்னொரு புரியாத புதிர்?!

No comments:

Post a Comment