Accu weather

Saturday, November 7, 2009

சாதாரண பிரிண்டரிலிருந்து புத்தகம்

காகிதத்தின் இருபக்கத்திலும் பிரிண்ட் செய்யும் வசதி உள்ள (இதை Duplexing என்பார்கள்) பிரிண்டர் உங்களிடம் இல்லாவிடினும் சாதாரண மலிவு பிரிண்டர் மூலம் கூட தாளின் இருபக்கமும் அச்சிட்டு ஒரு புத்தகம் போல செய்யலாம் என நம் நண்பர் முகம்மது இஸ்மாயில் விளக்கியிருந்தார். அது எப்படி என அனைவருக்கும் பயன்படட்டுமேயென இங்கு ஒரு பதிவாகவேயிடுகிறேன்.

”விலை அதிகம் உள்ள பிரிண்டர்களில் தான் ஒரே நேரத்தில் இருபுறமும் அச்சிட இயலும். ஆனால் Canon LBP2900 போன்ற விலை குறைவான Entry Level Printer களிலும் இதை செய்ய இயலும். அதற்கான வழிமுறை இதோ,,,

மொத்தம் 150 page உள்ள doc.file லை புத்தகம் போல பிரிண்ட்செய்ய வேண்டி உள்ளது என்றால் 75 காகிதத்தை மட்டும் பிரிண்டரின் ட்ரேயில் வைக்கவும். இல்லை அதைவிட அதிகமாக வைத்தாலும் பிரச்சினை இல்லை.

பிறகு படத்தில் உள்ளபடி Print Range - All, மற்றும் Print - Odd Pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 1,3,5,7 ….. 149 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும்.

பிறகு ட்ரேயில் மீதம் உள்ள வெற்று தாள்களை எடுத்துவிட்டு பிரிண்ட் ஆகி வந்த 1 to 149 Odd Pages 75 சரியாக ட்ரே உள்ளே வைத்து மறுபடியும் ப்ரிண்ட் கொடுக்கவும். இப்ப அதில் Even pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 2,4,6,8 ….. 150 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும். அவ்வளவுதான் விஷயம்.

குறிப்பு - இதில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் பிரிண்டரானது பிரிண்ட் பண்ணி அடுக்கும் முறை தான். அதில் சரியான பக்கத்தை வைத்தால் தான் இரண்டு பக்க பிரிண்டிங் சாத்தியம். இல்லையென்றால் ஒரே காகிதத்தின் ஒரே பக்கத்திலேயே இரண்டு பக்கத்தையும் பிரிண்ட் செய்துவிடும். அல்லது அடுத்த பக்கத்தை தலைகீழாக பிரிண்ட் செய்யவும் வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் Document முதல் நான்கு பக்கத்தை மட்டும் சோதனை முறையில் வெறும் இரண்டு காகித்தை வைத்து பிரிண்ட் செய்து இதை நன்றாக புரிந்து செய்யவும். தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையில் தேவையற்ற வீணடிப்பு சோதனைகள் வேண்டாம். LOL.”

நன்றி முகம்மது இஸ்மாயில்!!

xMax எனப்படும் wireless technology குறித்து அவர் விசாரித்து கேட்டிருந்தார். சுத்தமாக எனக்கு பரிச்சயம் இல்லாததால் மவுனமே எஞ்சியது. இந்நுட்பத்தை நம்மில் யாராவது பயன்படுத்தி இருந்தால் அனுபவத்தை சொல்லலாமே. பதிலுதவியாய் இருக்கும்.

"நண்பன் - உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளும் பரிசு” என்றார் ஒருவர். பரிசுகளினால் பயன் உண்டு. ஆனால் அவற்றை விலை கொடுக்காமல் வாங்கமுடியாது. உண்மைதான்.

ண்பர்கள் சிலர் மென்புத்தகங்களை இறக்கம் செய்ய முடியவில்லையே என புகார் சொல்லியிருந்தார்கள். தீர்வாக http://www.scribd.com -ல் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment