Accu weather

Tuesday, March 25, 2014

My Ads




Saturday, November 7, 2009

ஜிமெயில்காரி


கூகிளின் ஜிமெயில் சேவையானது நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றது. திடீரென அங்கே காலும் இங்கே கைகளும் என உருவாகி அது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இப்படி அது நாளும் பரிணமிப்பதால் அவ்வளவு சீக்கிரமாக எந்த ஜிமெயில் பயனரும் இன்னொரு மெயில் சேவைக்கு எளிதில் மாறிவிடமாட்டார் என்றே தெரிகின்றது. கண்கவர் கலர்களில்லை. ஒரு கவர்ச்சியுமில்லை. ஆனால் எளிமையாகவே நம்மை கவர்ந்துவிட்டவள் அவள். உன்னைத்தானே காதலிப்போம் கரங்குவிப்போமென அந்த 146 மில்லியன் பயனர்களும் சொல்ல தினமும் ஆயிரக்கணக்கான காரணங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இங்கே மூன்று காரணங்கள் உங்களுக்காக.

ஹாட் மெயில்,யாகூ மெயில் போன்ற பிற மெயில் சேவைகளில் இருக்கும் உங்கள் பழைய மெயில்களையெல்லாம் இங்கே ஜிமெயிலுக்கு கொண்டுவர அவளே import வசதி செய்து கொடுத்திருக்கின்றாள். எனவே பல மின்னஞ்சல் கணக்குகளை இனிமேலும் நீங்கள் மெயிண்டெயின் செய்யாமல் அவற்றிலிருப்பதையெல்லாம் உங்கள் ஜிமெயிலில் இறக்குமதிசெய்து விட்டு மற்றவைகளை கமுக்கமாய் ஒழித்துவிடலாம். Settings---> Accounts and Import-ல் இதற்கான வசதிகளை நமக்கு கொடுத்திருக்கின்றார்கள். Esaya Inc-ன் TrueSwitch நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது.


அவசர அவசரமாக அந்த HR-க்கு மெயில் அனுப்பிய பிறகுதான் சட்டென உங்களுக்கு நினைவுக்கு வரும் அய்யே நாம Resume-ஐ அட்டாச் செய்யவில்லையே என்று. உடனே பட்டென அந்த மெயிலை ரிவர்சில் வாங்க இப்போது ஜிமெயிலில் வசதிசெய்து கொடுத்திருக்கின்றார்கள். இதை undo என்பர்.அதிக பட்சம் 10 நொடிகள் தான். அப்புறம் நோ..வே. அது HR பொட்டியில் போய் சேர்ந்திருக்கும்.Settings--->Labs-ல் சுட்டெலியை சுருளிச் சுருளி ரொம்ப கீழே போனால் Undo Send என ஒரு புது வசதியை பார்ப்பீர்கள். அதை enable செய்து கொள்ளவும். ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பும் போதும் அது undo செய்ய நமக்கு 10 நொடி வாய்ப்பைக் கொடுக்கும். என்றைக்காவது உயிர் காக்கலாம்.


முன்பெல்லாம் மெயில் செக்அப் செய்ய எனது ஐபோனில் ஒவ்வொரு முறையும் அந்த மின்னஞ்சல் பயன்பாட்டை திறக்க வேண்டும். அப்போதுதான் அது போய் ஜிமெயில் செர்வரோடு தொடர்புகொண்டு என் மெயில்களை இறக்கி காண்பிக்கும். இப்போது Push என ஒரு நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் அந்த மாதிரி செய்யவேண்டியதில்லை. அப்பப்போ அதுவே என் மெயில்களை உடன் உடன் இறக்கம் செய்து SMS வந்தால் கத்துவது போல அவ்வப்போது கத்துகின்றது. யாராவது மெயில் அனுப்பியிருப்பார்கள்.இந்த வசதியை பிளாக்பெர்ரி,நோக்கியாS60 மற்றும் விண்டோஸ் மொபைல் செல்போன்களிலும் enable செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட சுட்டி உங்களுக்கு உதவும். http://www.google.com/mobile/products/sync.html#p=default

இப்படி இலவசமாய் தொடரும் இந்த ஜிமெயில்காரியின் சேவை இன்னும் நீடூழி வாழவேண்டும் என்றேன் நான். ஆனால் அந்த monopoly விஷயத்தில் எனத் தொடங்கிய கோபாலின் வார்த்தைகளையும் மீறி ஓடிச்சென்றது அந்த Amtrak தொடர்வண்டி.