Accu weather

Saturday, November 7, 2009

வாடகைக்கு


நாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கும் ”யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்” நிஜமாகிக் கொண்டே வருகின்றது. போன மாதம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு நாம் இந்த மாதம் காசு கட்டுவது போல போன மாதம் முழுக்க பயன்படுத்திய போட்டோஷாப் மென்பொருளுக்கான வாடகை கட்டணத்தை இந்த மாதம் நீங்கள் கட்டிவிட்டு ஒரேயடியாக ஜகா வாங்கிக்கலாம். கையில் காசிருந்தால் இன்னும் இரண்டு மாதம் கூட போட்டோஷாப்பை நீங்கள் வாடகைக்கு குறைந்த கட்டணத்தில் உங்கள் கணிணியில் வைத்துக் கொள்ளலாம். பைரேட்டட் மென்பொருள்களின் புழக்கத்தை தவிர்க்க இந்த மாதிரியான ”யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்” ஒரு நல்ல நடைமுறை தான்.

இதற்கு கணிணியெல்லாம் தேவையில்லை. Computing without a computer என்ற கோஷத்தோடு வந்திருக்கின்றார் 25 வயது சச்சின் துக்கால்(Sacchin Duggal). இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பறந்ததுகளில் இதுவும் ஒன்று.

nivioCompanion என செட்டாப்பாக்ஸ் போல ஒரு சின்ன பொட்டி. அந்த சின்ன பொட்டியோடு ஒரு கீபோர்டு மவுசு மானிட்டரும் இருந்தால் யூ ஆர் ஆல் செட். இந்த சிறிய பொட்டியானது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்க உங்கள் விண்டோஸ் விஸ்டா முதல் எல்லாமே தூரத்திலுள்ள அவர்கள் டேட்டா செண்டரிலிருந்து தான் வரும். அந்த பொட்டியினுள் எதுவுமே நடப்பதில்லை. சேமிக்கப்படுவதில்லை எல்லாமே அவர்கள் டேட்டா சென்டரிலுள்ள SAN-ல் தான் சேமிக்கப்படும். nDrive என்கின்றார்கள்.10GB இலவசமாம்.Computing power-ஐ இஷ்டத்துக்கும் அப்புறம் கூட்டிக்கொள்ளலாம். Hardware அல்லது software upgrade பிற்காலத்தில் செய்யத் தேவையில்லை. ஒரு நாளும் கிராஷ் ஆகாது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் என சத்தியம் செய்கின்றார்கள். குறைந்தது 128 Kbps வேக இணைய இணைப்பாவது இருக்க வேண்டும். ஆனால் என்ன ஒரே பிராப்ளம் நாம் காலத்துக்கும் ஹார்டுவேருக்கும் சாப்ட்வேருக்கும் மாதச் சந்தா கட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment