Accu weather

Saturday, November 7, 2009

ஐந்து ஆண்டுகள்


மார்ச் ஒன்பது.
இன்றைக்கு நம் வலைப்பதிவை தொடங்கி சரியாக ஐந்து ஆண்டுகள் ஆயிற்று.எவ்வளவு விரைவாக நாட்கள் ஓடுகின்றன.அன்றைக்கு ஒரு சில அளவிலேயே இருந்த தமிழ் வலைப் பதிவுகள் இன்றைக்கு அநேகமாயிரம் வலைப் பதிவுகளாக தமிழில் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்திய மொழிகள் வேறெதாவற்றில் இந்த அளவுக்கு புரட்சி இருக்கின்றதாவென தெரியவில்லை. உண்மையில் கணிணிபடித்த மேதாவிகள் பலரும் பிராந்திய மொழியில் கணிணியில் எழுதுவதையே தீண்டத்தகாது போல் பார்ப்பதுண்டு.அதையெல்லாம் தாண்டி தொழில் நுட்பத் தகவல்களை தமிழில் தந்த போது கிடைத்த வரவேற்பு எனக்கு ஆச்சரியமானது. தொடர்ந்து நண்பர்கள் கொடுத்த அளப்பறிய ஆதரவால் இன்றுவரைக்கும் அது நீடித்து வந்திருக்கின்றது. பின்னே 157 பின்னூட்டங்களை தளராமல் இட்டு உற்சாகப்படுத்திய இனிய தமிழ்நெஞ்சம் போன்றோரை என் சொல்வது. அவரும் www.tamilnenjam.org என தளம் தொடங்கி தொழில் நுட்பத்தகவல்களை தமிழில் வழங்கி விளாசிக் கொண்டிருக்கின்றார்.

கடந்த நான்காம் தியதி நமது வலைப்பதிவை RSS வழி படிப்பவர்களின் எண்ணிக்கை 2000-த்தை எட்டியது.இதில் மின்னஞ்சல் வழி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 1142.நேரடியாக தளத்துக்கு வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 800-ஐ தாண்டும்.பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 155. ஒரு நண்பர் எழுதியிருந்தார். "வணக்கம் ,உங்கள் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவு படுத்துகின்றன ,கடந்த வாரம் குமுதம் வாயிலாக உங்கள் தளம் பற்றி அறிந்து 4 நாட்களில் 50 பிலாக்குகள் வாசித்தேன். என் போன்ற வண்பொருள் வல்லுன்ர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிகவும் மகிழ்ச்சி. நன்றிகளும் கூட.எனக்கு ஒரு ஆசை , நீஙகள் ஒவ்வொரு மணித்துளிக்கும் ஒரு blog எழுதக்கூடாதா?" என்று. ஆங்கிலத்தில் ஆயிரம் தளங்கள் தொழில் நுட்பத்தகவல்களை வழங்க இருந்தாலும் தாய் மொழியில் நாலுவார்த்தை அதுபற்றி படிக்க ஆவலுடன் நிறைய நெஞ்சங்கள் இருக்கின்றன என புரிந்தது. ஆனாலும் கணிணி சில்லுகளைப் பற்றி எழுதுபவனெல்லாம் சுஜாதாவாகிடமுடியுமா என்ன? ஆயினும் நிஜத்திலேயே சில சுஜாதாக்கள் தமிழில் எழும்பினால் தமிழன் அறிவியலில் இன்னும் ஆர்வமாகி அவன் கடல் மூழ்கி கப்பல் கட்டுவான்,ஒளியை பீறிட்டுச்செல்லும் விமானம் கட்டுவான், விண்ணை அளக்கும் கணிணி கட்டுவான், ஈழத்துக்கு ஒரு பாலமமைப்பான்.

ந்த ஐந்தாவது ஆண்டில் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஃறிணைப் பொருட்களெல்லாம் சீக்கிரத்தில் உயிர் கொண்டு விடும் என்பது எனது எண்ணம். வீட்டிலிருக்கும் பொருட்களும் சரி ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களும் சரி முன்னெப்போதும் இல்லாத அளவில் "ஸ்மார்ட்" ஆகிக்கொண்டே வருகின்றன. அதன் முக்கிய பங்களிப்பு இவையெல்லாம் எளிதாக இணையத்தில் இணைக்கப்படுதல் தான். இப்போதெல்லாம் வாகனத்தில் பொருத்தப்படும் மைரோப்ராசசர்கள் உங்கள் கார் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அதன் சர்வீஸ் சென்டருக்குசொல்லிக் கொண்டிருக்க வீட்டிலிருக்கும் "கேஸ்" சிலிண்டரோ அதில் கேஸ் தீர்ந்துகொண்டிருப்பதை அதன் நிறுவனத்துக்கு அலெர்ட் செய்திருக்கும் வாய்ப்புண்டு. இதெல்லாம் சாத்தியமாக கட்டற்ற இணைய இணைப்பு தேவை.அது வைமேக்ஸ்(WiMAX) வடிவில் சாத்தியமாகும் போல் தோன்றுகிறது.

WiFi என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது வீட்டில் அல்லது விமானநிலையத்தில் அல்லது காஃபிஷாப்பில் மட்டும் இஷ்டத்துக்கு இணைய இணைப்பை வழங்கும் இணைப்பு ஆனால் WiMAX-ஸோ நம்மூரின் மூலை முடுக்கெல்லாம் இணையத்தை வயர்லெஸ்ஸாய் வழங்க உதவ வந்திருக்கும் புதிய தொழில் நுட்பம். இது இன்னும் இதன் ஆரம்பகட்டங்களிலேயே உள்ளது. ஒரு நகரமுழுவதும் WiFi செய்யப்பட்டால் எப்படி இருக்கும் அப்படி இருக்கும் வைமாக்ஸ். அதிகபட்சமாக 70Mbps வேகம்.ஒரு டவர் வைத்தாலே அதன் 20 கிலோமீட்டர்கள் சுற்றளவுக்கு அதிவேக இணைய இணைப்பு வயர்லெஸ்ஸாய் கிடைக்கும்.Worldwide Interoperability for Microwave Access என்பதை தான் WiMAX என்கிறார்கள். இதை 802.16 என்றும் சொல்வதுண்டு (MAN-Metropolitan Area Network).இது சீக்கிரத்திலேயே கேபிள் மற்றும் DSL இணைய சேவைகளை தூக்கி சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடும்.

சென்னையின் சந்துபொந்துகளையெல்லாம் பாவிக்கும் ஒரு WiMAX ரிலையன்சில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
மேலதிக தகவல்கள் இதோ
150 Kbps - Rs.750/- Per month
400 Kbps - Rs.999/- Per month
600 Kbps - Rs.1399/- Per Month
1000 Kbps - Rs.2199/- Per Month

Installation Charges - Rs.500/- Only
Security Deposit - NIL

For further details call at 9962 200 300
http://www.reliancewimax.in

Aircel-ல்லும் WiMAX சேவையை சென்னையிலும் கோயம்புத்தூரிலும் வழங்குவதாக கேள்வி.

No comments:

Post a Comment