Accu weather

Saturday, November 7, 2009

திரும்பி ஒருப்பார்வை - பேசிகள்


இன்றைய குழந்தைகளைப் பார்த்து கொடுத்துவைத்தவர்கள் என்று சொல்வதா அல்லது அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்வதா என புரியவில்லை. ஆனால் அவர்களால் இன்றைக்கு நினைத்த மறு கணமே கண்டம் விட்டு கண்டம் பேசமுடிகின்றது. கி.மு காலங்களில் என்னமாய் கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். பெர்சியர்களோடு நடைபெற்ற மாரத்தான் போர்க்களச் சண்டையில் கிரீஸ் நாடு வெற்றி பெற்றுவிட்டதாம். இந்த வெற்றிக்களிப்பை 25மைல் தொலைவிலுள்ள ஏதென்ஸ் நகரம் போய் சொல்ல வேண்டும். பெடிபிடெஸ் என்ற ஒரு இளைஞன் ஓடுகின்றான். ஓடுகின்றான். ஓடிக்கொண்டே இருக்கின்றான்.ஏதென்ஸ் நகர மக்களிடம் போய் அந்த வெற்றிச்செய்தியைச் சொன்னதும் தான் தாமதம் அப்படியே களைத்து சுருண்டுவிழுந்து செத்துப்போகின்றான்.இப்படியாக ஒரு சோகச் சம்பவத்தில் தொடங்கியது தான் நம் இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்பம்.Signal was really bad back then.

Interference-ஆக கோபால் இடையில் நுழைந்தான்.”ஆனால் நம்மூரில் அதற்கும் முன்பேயே அன்னப்பறவையை தலைவனுக்கும் புறாவை மன்னனுக்குமாக தூதுவிட்டு தெளிவான சிக்னல்களோடு இருந்திருக்கின்றார்களே” என்றான். எனக்கும் அவன் வாதம் நியாயமாகப் பட்டது.

இப்போ ஒரு quick F-A-S-T F-a-r-w-a-r-d

1876-ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் "மிஸ்டர். வாட்சன், இங்கே வாருங்கள், நான் உங்களைப் பார்க்க வேண்டும்" எனத் தெள்ளத் தெளிவாக உலகின் முதல் தொலைப்பேசியில் பேச அது மறுமுனையிலிருந்த வாட்சனுக்கும் மிகத் தெளிவாகக் கேட்டது. ஒரு புதிய யுகம் மலர்ந்திருந்தது.

ஆனால் இன்றைக்கு அதன் பின் 125 ஆண்டுகள் மேல் தாண்டி ஹலோ ஹலோ வென கத்தியும் கைப்பேசியில் ஒன்றும் கேட்காமல் சிக்னல் கிடைக்கலவெனச் சொல்லி நொந்துகொள்வது நம் காலத்தின் கோலம்.

இப்படி தொலை,கை என பேசிகள் பலவும் கடந்து வந்த பாதை இங்கே அழகாக படமாக காலகிரமப்படி. சேமித்துவைத்துக்கொண்டேன்.படத்தை சொடுக்கி நீங்கள் பெரிதாக்கியும் பார்க்கலாம்.

Cellphone history timeline

No comments:

Post a Comment